Achadicha Kaasa Lyrics
அச்சடிச்ச காச அவன் புடிச்சு பாடல் வரிகள்
Last Updated: Oct 01, 2023
அச்சடிச்ச காச அவன் புடிச்சு வெச்சான்டா
அவன் புடிச்சு வெச்ச காச நான் அடிச்சுப் புட்டேன்டா
ஒனக்கு வந்த காசு எல்லாம் எனக்கு வந்ததப் போல
எந்தக் காசு எவன் கிட்டேயும் நிக்கப் போறதில்ல
கையிக்குக் கையி மாறி வரும்
பையிக்கு பையி ஏறி வரும்
கண்ட எடத்துல சுத்தி வரும்
எனக்கு மட்டும் கட்டுப்படும்.......(அச்சடிச்ச)
கேட்டா கொடுக்குறவன்
இப்ப இங்கே எவன் இருக்கான்
பிச்ச கேக்க வேணாமுன்னு
புடிங்கிக்கிட்டேன் டா
பானாக்காரன் கண்டுக்குனா
எனக்கும் ரிஸ்க் இல்லையா
எதையும் தாங்கும் இதயம் கூட
இதுக்கும் வேணுமடா
அப்போ கொடுக்குறவன் இருந்ததொரு காலம்
இப்போ எடுக்குறவன் நெறஞ்சு போன நேரம்
எவனும் இருக்குறத பங்கு வெக்கணும் சொன்னா
அதுல எனக்கும் ஒரு பங்கில்லையா நைனா
தப்பு பண்ணும் எனக்கும் கூட
தத்துவமும் தெரியும்
தத்துவத்த ஒதுக்கிக்கினேன்
தப்ப மட்டும் புடிச்சுக்கினேன்.......(அச்சடிச்ச)
கட்டாயம் கெடைக்குமுன்னு
கண்டீசன் எதிலும் இல்ல
பட்டினியும் கெடக்க வேணும்
பாத்திருக்கேண்டா
கூட்டுக்கொரு நெஞ்சமும் இல்ல
பாட்டுக்கொரு பஞ்சமும் இல்ல
தனிக்காட்டு ராசாவா நான்
சுத்தி வருவேண்டா.....
பஞ்சு மெத்தையவா என் ஒடம்பு கேக்கும்
எங்க படுத்தாலும் சோக்கா வரும் தூக்கம்
என்ன சொப்பனமும் டிஸ்டப்பு பண்ணாதே
உச்சி சூரியனும் என்ன எயுப்பாதே
முழிச்சிக்கினே தூங்குறவன்
ரொம்ப பேரு இருக்கான்
நான் தூங்கிக்கினே முழிச்சிருப்பேன்
தெரிஞ்சுக்க நீ போடா போடா......(அச்சடிச்ச)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.