என்னடா பாண்டி இன்னா பாடல் வரிகள்

Movie Name
Valmiki (2009) (வால்மிகி)
Music
Ilaiyaraaja
Year
2009
Singers
Lyrics
Vaali

என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற
எத்தனையோ பண்ணி இன்னாத்த நீ கண்டே
முடிச்சவுக்கி மொள்ளமாரி
மோசம் போகும் பொயப்பிது
கட்டி வெச்ச கல்லற கூட உன்ன கண்டு சிரிக்குது
என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற

ஒயச்சு சேத்த காசத்தான் ஓசை இல்லாம உருவுனே
அடுத்த வயித்தில் அடிச்சிட்டு ஓன் வயித்த கழுவுனே
அப்பனும் இருந்திருந்தா நல்ல வழி போயிருப்பே
எப்படியோ ஆயி இப்ப தப்பு வழி போயிட்டியே

உன்னால எத்தனையோ மனசெரிஞ்சு போனதடா
இந்நாளில் அத்தனையும் சும்மா உன்ன விட்டிடுமா
செஞ்ச தவற எல்லாம் இப்போ திரும்பிப் போயி யாரும்
சரி செஞ்சுபுட்டு திருத்தி வந்த சேதி ஒலகில் இல்ல
என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற

நிம்மதியா வாழத்தான் எல்லாருமே ஒழைக்கிறான்
நீண்ட நாளு நிலைக்கத்தான் நேர் வழியில் சேக்குறான்
இருந்தாலும் துக்கம் வரும் எல்லாரையும் சுத்தி சுத்தி
நம்மால மாறிடுமா நல்லவனுக்கே இந்த கதி

உன்னோட சங்கதிதான் ஒண்ணா ரெண்டா எண்ணிப் புடு
உன்னையே உனக்குதான் புடிச்சிருக்கா சொல்லிப் புடு
இன்னும் இருக்கு வயசு அட இப்பவாச்சும் திருந்து
இப்ப விட்டுப் புட்டா கெட்டுடுவே குட்டிச் சுவரக் கேளு
என்னடா பாண்டி இன்னா பண்ணப் போற…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.