தென்றலும் மாறுது திங்களும் மாறுது பாடல் வரிகள்

Movie Name
Valmiki (2009) (வால்மிகி)
Music
Ilaiyaraaja
Year
2009
Singers
Shreya Ghoshal
Lyrics
Vaali

தென்றலும் மாறுது திங்களும் மாறுது
உன்னிடம் மாற்றமும் வந்திடும்
சின்ன மணிக் குயில் மந்திரம் போல் அந்த
சேதியை சொல்லிடும் நாள் வரும்...(தென்றலும்)

இது நானாய் மாற்றுவதா
இல்லை தானாய் மாறுவதா
பூப் பூவாய் தாலாட்டும் காற்றே நீ சொல்லு
உன் பாட்டாலே எல்லார்க்கும் நம்பிக்கை ஊட்டு (தென்றலும்)

யாராலே யார் யார்க்கு மாற்றங்கள் உண்டாகும்
நிலம் போலே நீரோட்டம் ஆற்றுக்கும் உண்டாகும்
நதி போலே உன் வாழ்க்கை நன்றாக ஓடட்டும்
நம்பிக்கை தீபங்கள் அழகாக ஆடட்டும்

சிப்பிக்குள்ளே முத்து அதை நீரில் மூழ்கித் தேடு
வெற்றிக்கும் ஓர் வித்து அதை உள்ளே மூழ்கித் தேடு
கண்டால் தவறாது அதை தனியே நீ மாற்று
நீ சும்மா இருந்தால் எதுவும் இங்கு தானாய் நடக்காதே
தென்றலும் மாறுது திங்களும் மாறுது

கிளி வந்து பழம் கொத்தும் மாந்தோட்டம் நீ போடு
அணில் கொஞ்சி விளையாடும் பூப்பந்தல் நீ போடு
பிறை என்று எண்ணாதே முழு நிலவாய் நீ வருவாய்
சிறு விதையாய் இருந்தாலும் ஆல் போல நிழல் தருவாய்

குத்தும் கையில் சிற்பம் உளி குத்தக் குத்த தோன்றும்
உன்னை சிற்பம் ஆக்கு ஒரு வெற்றுக் கல்லா நீயும்
எல்லாம் கை கூடும் உன் எண்ணம் நிறைவேறும்
விடி வானில் தோன்றும் ஒளி மீன்கள்
வாழ்த்துக்கள் சொல்லும்.........(தென்றலும்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.