ஒளி தரும் சூரியனும் நானில்லை பாடல் வரிகள்

Movie Name
Valmiki (2009) (வால்மிகி)
Music
Ilaiyaraaja
Year
2009
Singers
Lyrics
Vaali

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

ஒளி தரும் சூரியனும் நானில்லை
இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
விலகாத இருளினையும்
விலக்கி வைக்கும் விளக்கானேன்
அது போதும் அது போதும்
உன் விடியலுக்கோர் கிழக்கானேன்

என்னை மாற்ற ஏன் எண்ணினாய்
இங்கு என்னை ஏமாற்றி வாழ்ந்தவன்
கல்லைக் கூட நீ கனிய வைக்கிறாய்
முல்லைப் பூவென மாற்றினாய்

மாறிப் போகின்ற உலகிலே
என்றும் அன்பு மாறாது சொல்லலாம்
ஒன்றும் இல்லாது ஓய்ந்து நின்றாலும்
ஊக்கத்தை அன்பில் ஊட்டலாம்

எத்தனை உள்ளம் நோக
என்னென்ன செய்தவன்
சத்தியம் செய்தே சொல்வேன்
இன்று தான் மனிதனே
திருந்திய பின்னே வருந்துவதேனோ
வருவது வசந்தங்களே

வண்ணப் பூப்பூத்து வாசம் எங்கெங்கும்
வந்து சூழ்கின்ற நாள் இது
கோயில் மணியோசை தென்றல் காற்றோடு
காதில் தேன் பாயும் நாள் இது

கொஞ்சும் கிளி போல கோலக் குயில் போல
பிஞ்சு மனசாகிப் போகுது
கங்கை நதி போல பொங்கும் அலை போல
உள்ளம் ஒன்றாகிச் சேர்ந்தது

இன்று போல் என்றும் என்றும் நல்லதே செய்யலாம்
உள்ளதே போதும் என்று நிம்மதி கொள்ளலாம்
ஒரு வழி அடைத்தால் மறு வழி திறக்கும்
அதிசயம் அதிசயமே.........(ஒளி தரும்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.