பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும் பாடல் வரிகள்

Last Updated: May 30, 2023

Movie Name
Yogam Rajayogam (1989) (யோகம் ராஜயோகம்)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Mano
Lyrics
Vaali
பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்
எல்லோரும் வந்து உல்லாசம் தேட
சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட
ஹே ஹா...லலலல்லா...லாலாலா...
பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்

எத்தனையோ சிரிப்புகள் இருக்கு அதன் கணக்கு
அன்று சொன்னாரே கலைவாணர் நமக்கு
நல்லதொரு நகைச்சுவை விருந்து இதையறிந்து
இது எந்நாளும் நோய் தீர்க்கும் மருந்து

கள்ளமற்ற சிரிப்பு உள்ளபடி சிறப்பு..ஹஹா
புன்னகையை விடவா பொன்னகையின் மதிப்பு
இப்போதும் எப்போதும் சிரிப்போம்

பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்
எல்லோரும் வந்து உல்லாசம் தேட
சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட
ஹே ஹா...லலலல்லா...லாலாலா...
பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்

ஏழை மக்கள் சிரிப்பிலே வாழுது தெய்வம் வாழுது
இது அந்நாளில் அண்ணாவும் சொன்னது
மத்தவங்க துன்பம் கண்டு சிரிச்சா பல்லை இளிச்சா
குத்தம் சொல்லாதே யாராச்சும் ஒதைச்சா

ஆணவத்தில் சிரிச்சா நாடு உன்னை பழிக்கும்
அன்பு கொண்டு சிரிச்சா தேசம் உன்னை மதிக்கும்
இப்போதும் எப்போதும் சிரிப்போம்

பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்
எல்லோரும் வந்து உல்லாசம் தேட
சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட
ஹே ஹா...லலலல்லா...லாலாலா...

பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்..ஹாஹ்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.