காவியம் பாடவா பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Idhayathai Thirudathe (1989) (இதயத்தை திருடாதே)
Music
Ilaiyaraaja
Year
1989
Singers
Mano
Lyrics
Vaali
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

விளைந்ததோர் வசந்தமே
புதுச்சுடர் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் என்பதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ


புலர்ந்ததோ பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசைத்ததும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
காவியம் பாடவா தென்றலே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.