எல்லாம் தெரிகிறது எனக்கு பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Poikkal Kudhirai (1983) (பொய்க்கால் குதிரை)
Music
M. S. Viswanathan
Year
1983
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது

உயர்ந்து நிற்கும் மாமலையே
உன்னை மேகம் தொடுகிறது
கொஞ்சம் இறங்கி வந்தால்
நானும் தொடுவேன் ஆசை சுடுகிறது

ஓடிடும் ஓடையே பூமியின் ஆடையே
உன்னைத்தான் தீண்டிட ஏங்குது வாடையே
அழகு எல்லாம்…ஹா ஹா ஹா தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

நனைந்து நிற்கும் தாமரையே
எங்கும் தண்ணீர் வழிகிறது
பக்கம் நெருங்கி வந்தாய்
ஈரம் துடைக்க கைகள் துடிக்கிறது

நாளெல்லாம் நீரிலே நூலிடை நீந்துமோ
நான் அதைப் பார்க்கையில் என் மனம் தாங்குமோ
அழகு எல்லாம் ஹா…தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

திரண்டு நிற்கும் பால் நிலவே
உன்னை வானம் அணைக்கிறது
மண்ணில் தவழ்ந்து வந்தால்
நானும் அணைப்பேன் தேகம் கொதிக்கிறது

பார்வைகள் தேடிடும் பேரெழில் பிம்பமே
நீ எனை சேர்ந்த பின் வேறெது இன்பமே
அழகு எல்லாம் ஹா…தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

மனக்கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம்…ஹா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.