பொட்டு வச்ச பொண்ணுக்காக பாடல் வரிகள்

Movie Name
Poikkal Kudhirai (1983) (பொய்க்கால் குதிரை)
Music
M. S. Viswanathan
Year
1983
Singers
Malasiya Vasudevan, Vani Jayaram
Lyrics
Vaali
பொட்டு வச்ச பொண்ணுக்காக
பெட்டு வச்சேனே அதுக்கு
அச்சாரமா உன்னப் இப்போ
தொட்டு வச்சேனே..... ( பொட்டு )

சம்பந்தம் பெற்றெடுத்த சின்னக்குயிலே உன்
சம்பந்தம் வேணுமடி வண்ணக் குயிலே
சம்மதம் தந்துவிடு சீக்கிரம் வந்து விடு
நாள் பார்த்து சொல்லுறப்போ
தோள் பார்த்து மாலை இடு.... ( பொட்டு )

கிள்ளாம கிள்ளி வச்ச முல்லை அரும்பு இது
வெட்டாமல் வெட்டி வச்ச வண்ணக் கரும்பு
ஒன்னத்தான் எண்ணி வர சின்னக்கால் பின்னி வர
வான் பார்த்த பூமிக்கிப்போ நீர் வார்க்க வந்து விடு

பொட்டு வச்ச பொண்ணு நெஞ்ச தொட்டு வச்சானே
பருவ பாட்டுக்குத்தான் மச்சான் நல்ல மெட்டு வச்சானே

அங்காள அம்மன் கோயில் தங்கரதமே
இது அத்தான முத்தாடத்தான் தத்தி வருமே
தித்திக்கும் வண்ண முகம் திண்டுக்கல் வாழப்பழம்
வாயார நீயும் தின்ன வாகான நேரம் வரும் ( பொட்டு )

பஞ்சுக்கு பக்கத்துல வச்ச நெருப்பு
இது பத்திக்க காத்திருக்கு பக்கம் வரப்போ
அட்டப் போல் ஒட்டிக்கடி அன்பே நீ கட்டிக்கடி
மாமாவே என்ன நீயும் பூமால போட்டுப் புடி

பொட்டு வச்ச பொண்ணு நெஞ்ச தொட்டு வச்சானே
பருவ பாட்டுக்குத்தான் மச்சான் நல்ல மெட்டு வச்சானே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.