உன்னை எனக்கு பிடித்திருக்கிறது பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Poikkal Kudhirai (1983) (பொய்க்கால் குதிரை)
Music
M. S. Viswanathan
Year
1983
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது...

வானத்தின் நிறம் காட்டும்
உன் விழிகள் என்னை பார்க்கையில் மட்டும்
ஏன் வறுமையின் நிறம் காட்டுகின்றன

உன்னை எனக்கு பிடித்திருக்கிறது...
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது

என் விழிகளே விரல்களாக நீண்டு
உன் இடுப்பின் மடிப்புகளை
வருட நினைக்கும்போது உன்
மேனி வீட்டின் முந்தானை கதவால்
மூடிக் கொள்கிறாயே

தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து
திறக்க சொல்ல மாட்டேனா
தத்தின்ன தின்ன தத்தின்ன தின்ன
அஹ்ஹ அஹ்ஹ அஹ்ஹா ஹா
தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து
திறக்க சொல்ல மாட்டேனா
ராஆஆஅ ற ரராஆஆஆ.....

உன்னை எனக்கு பிடித்திருக்கிறது...
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.