மொட்டு மலராத மொட்டு பாடல் வரிகள்

Movie Name
Kaadhal Kottai (1996) (காதல் கோட்டை)
Music
Deva
Year
1996
Singers
Swarnalatha, Vaali
Lyrics
Vaali
மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் ஹே இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஹோய்...

தமிழ் தரும் சுவை என உன் வாய் மொழி கேட்டேன்
அது தரும் சுகம் என விழி பார்வையை பார்த்தேன்
உந்தன் கையில் பெண்ணாக வேண்டும்
உன்னால் பெண்மை பண்பாட வேண்டும்
ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும்
என்றும் நீயாய் நான் ஆக வேண்டும் -(1)
உந்தன் கையில் பெண்ணாக வேண்டும்
உன்னால் பெண்மை பண்பாட வேண்டும்
ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும்
என்றும் நீயாய் நான் ஆக வேண்டும் -(2)
இலக்கியம் எனதுடலே வா நீ வா
இலக்கணம் உனதுருவே தா நீ தா
தேவா.......

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் ஹே இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

எனை தொடு வரம் கொடு உயிர் வாழ்ந்திட கேட்டேன்
மலர் உடல் மணம் பெற தினம் தேவனை பார்த்தேன்
பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்
பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம்
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்
நித்தம் நித்தம் பித்தான சித்தம் -(1)
பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்
பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம்
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்
நித்தம் நித்தம் பித்தான சித்தம் -(2)
இளமையின் ரகசியமே வா நீ வா
இது தினம் அவசியமே தா நீ தா
தேவா..

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் ஹே இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.