காலமெலாம் காதல் வாழ்க பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Kaadhal Kottai (1996) (காதல் கோட்டை)
Music
Deva
Year
1996
Singers
K. S. Chithra, P. Unnikrishnan, Vaali
Lyrics
Vaali
காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி

(இசை)

கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
தூக்கம் கெட்டுப் போகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் அது போதை
காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

(காலமெலாம்)

ஜாதி இல்லை பேதமில்லை சீர்வரிசை தானோயில்லை காதல்
ஆதி இல்லை அந்தம் இல்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல்
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யார் என்ன காதல் வந்து சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே அது காசு பணம் கேட்பதில்லையே

(காலமெல்லம்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.