ஒரு நாளும் உனை பாடல் வரிகள்

Movie Name
Ejamaan (1993) (எஜமான்)
Music
Ilaiyaraaja
Year
1993
Singers
S. Janaki, S. P. Balasubramaniam, Vaali
Lyrics
Vaali
பெண்குழு : கங்கணகணவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கிறதே.. இது சுகம் தரும் சுயம்வரமே

பெண்குழு : ஆ...ஆ..ஆ..ஆ..

பெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

ஆண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

பெண்குழு : தனனனனனா தனனனனனா தனனனனனா
தனனனன னானானானானா

***

பெண் : சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

ஆண் : உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன்

பெண் : தோகை கொண்டு நின்றாடும் தேன்கரும்பு தேகம்

ஆண் : முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்

பெண் : அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

ஆண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே

பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

பெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

***

ஆண் : கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே

பெண் : உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா

ஆண் : ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே

பெண் : ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே

ஆண் : முத்தினம் வரும் முத்து தினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று

பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

பெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

ஆண் : உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

பெண் : விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்

ஆண் : இணையான இளமானே துணையான இளமானே

பெண் : ஓ..எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.