மானே நானே பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Sendhoorapandi (2004) (செந்தூரபாண்டி)
Music
Deva
Year
2004
Singers
Swarnalatha
Lyrics
Vaali
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாகம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாகம்

நீராடு இளமையிலே, சேவல் கூவும் வரையினிலே

மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

ஆடை நனைந்திருக்க ஆசை தீயை மூட்டாதா
ஆத்தாடி காளை கன்று வாலை மெல்ல ஆட்டாதா

தேகம் தழுவியொரு யாகம் செய்ய கூடாதா
காதோட கன்னிப்பூவும் காதல் கீதம் ஆகாதா

மின்சார மின்னல் ஒன்று மெல்ல மெல்ல பாய

மீட்டாத வீணை உந்தன் மார்பின் மீது சாய

புது ராகம் நரம்புகளில் உருவாகும் நொடிப்பொழுதில்

மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

பாதக் கொலுசு கொஞ்சும் பாதம் என்ன பூச்செண்டா
நான் தீண்டும் அங்கம் எல்லாம் தித்திக்கின்ற கற்கண்டா

பூவில் குடியிருக்க நீயும் என்ன பொன்வண்டா
நான் தானே உன்னை என்னை சிந்திக்காத நாளுண்டா

ஆகாயம் பொத்துக்கொண்டு கண்ணீர் விடும்போது

ஆகாய கங்கை செல்லும் கோட்டை இங்கு ஏது

ஒரு பாதி குளிர்ந்தெதென்ன, மறு பாதி கொதிப்பதென்ன

மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாகம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாகம்

நீராடு இளமையிலே, சேவல் கூவும் வரையினிலே

மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.