சின்ன சேதி சொல்லி பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Sendhoorapandi (2004) (செந்தூரபாண்டி)
Music
Deva
Year
2004
Singers
Mano, Swarnalatha
Lyrics
Vaali
சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆச மனம் பாடுதொரு தேவாரம்
மேற்கால வெயில் சாய
வாய்க்காலில் வெல்லம் பாய
மயக்கம் ஒரு கெரக்கம்
இந்த வயசுல மனசுல
வந்து வந்து பொரக்கும்

சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆச மனம் பாடுதொரு தேவாரம்

மெல்ல மெல்ல தாளம் தட்டும்
மத்தளமும் சம்மதத்த தருமோ
கச்சேரிய நானும் வைக்கும் நாள் வருமோ

அஞ்சு விரல் கோலம் போட
அச்சம் என்ன மிச்சமின்றி விடுமோ
அந்நாடந்தான் ஆசை என்னும் நோய் வருமோ

மொட்டு விரிந்தால் வண்டு தான் முத்தம் போடாதா

முத்தம் விழுந்தால் அம்மம்மா வெட்கம் கூடாதா

கட்டி புடிச்சிருக்க மெட்டு படிச்சிருக்க
எனக்கொரு வரம் கொடு மடியினில் இடம் கொடு

சின்ன சின்ன சேதி சொல்லி.. ம்ம்ம்ம்..
வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆச மனம் பாடுதொரு தேவாரம்

உன்ன விட்டு நான் இருந்தால்
அந்தி வரும் சந்திரனும் சுடுமோ
மன்மதனின் அம்புகளும் பாய்ந்திடுமோ

வெண்ணிலவ தூது விடு
வண்ண மயில் உன் அருகில் வருவேன்
பள்ளியறை பாடல்களை பாடிடுவேன்

என்னை கொடுப்பேன் கொண்டுபோ உந்தன் கையோடு

ஓட்டி இருப்பேன் ஆடை போல் உந்தன் மெய்யோடு

தன்னந்தனிச்சிருக்க உன்னை நினச்சிருக்க
பனி விழும் இரவினில் உதடுகள் வெடிக்கிது

சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆச மனம் பாடுதொரு தேவாரம்

மேற்கால வெயில் சாய
வாய்க்காலில் வெல்லம் பாய

மயக்கம் ஒரு கெரக்கம்
இந்த வயசுல மனசுல
வந்து வந்து பொரக்கும்

சின்ன சின்ன சேதி சொல்லி
வந்ததொரு ஜாதி மல்லி
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்
ஆச மனம் பாடுதொரு தேவாரம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.