வருகிறாய் தொடுகிறாய் பாடல் வரிகள்

Movie Name
Anbe Aaruyire (2005) (அன்பே ஆருயிரே)
Music
A. R. Rahman
Year
2005
Singers
Hariharan, K. Chandru
Lyrics
Vaali
ஆண்: போ.. போ...
ஆண்: போ.. போ....
ஆண்: வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய்
வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ எங்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
போ போ எங்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
பெண்: வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய் ஆனால் பொய் சொல்கிறாய்
போ போ

ஆண்: வர வரத்தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிற காதல் கடங்காரி
அடி உலகில் எவளும் உனைப்போல் இல்லையே அழகிய கொலைகாரி
பெண்: குளிர் நிலவினை நெருப்பாய் நினைக்கிற வெறுப்பாய் நீ ஒரு அசடனடா
அது உனக்கென உயில்தான் எழுதிய மயில்தான் நீ இதை அனுபவிடா
ஆண்: ஹைய்யோ! அம்மா! நீ பொல்லாத ராட்சசி
ஏண்டி என் கற்போடு மோதுகிறாய்
நானா உனை வாவென்று கூவினேன்
நீயாய் வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்
பெண்: உயிர் விடச்சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச்சொன்னால் உனை விட மாட்டேன்
பெண்: இறுதி வரைக்கும் இருப்பவன் என்று உறுதியை தந்து உதருவதென்ன
ஆண்: ஹோ! தவித்தது போதும் தனிமையில் என்னை இருக்கவிடு என்னைஇருக்கவிடு
இருக்கவிடு அன்பே இருக்கவிடு
வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ எங்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்

ஆண்: விடை கொடுத்தேன் விடு விடு விலகிடு தினம் தினம் எனை ஏன் துரத்துகிறாய்
அடி இதயக்கதவை இழுத்தே அடைத்தேன் எதுக்கதை தட்டுகிறாய்
பெண்: வங்க கடற்கரை மணலில் மடியினில் கிடந்த நாட்களை மறந்தாச்சா
உயிர் காதலை வளர்க்க பேசிய பேச்சு காத்துல பறந்தாச்சா
ஆண்: ஏதோ ஏதோ நான் ஏதே தோ பேசினேன்
தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன்
இன்று நான் விடுதலை அடைந்தவன்
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்
பெண்: தழுவிடும் இமையை தனக்கொரு சுமையாய்
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லையே
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனையன்றி இம்மி உறுதுணை இல்லை
ஆண்: காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
மறக்கவிடு உன்னை மறக்கவிடு
மறக்கவிடு அன்பே மறந்துவிடு
மறக்கவிடு
வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ எங்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
போ போ எங்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
பெண்:வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ எங்கிறாய் ஆனால் பொய் சொல்கிறாய்
ஆண்:போ போ..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.