ராஜா ராத்திரிக்கு பாட்டுப் பாடவா பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Pillai Paasam (1991) (பிள்ளை பாசம்)
Music
Ilaiyaraaja
Year
1991
Singers
S. Janaki
Lyrics
Vaali

ஹேய் ராஜா ராத்திரிக்கு பாட்டுப் பாடவா
பூ மாலை` காத்திருக்கு தோளில் சூடவா
நான்தான் நீ படிக்கிற நாளேடு
தாகம் தீர்த்து வைக்கிற தேன் கூடு வாய்யா..ஹேய் (ராஜா)

பாவை மேனியை பார்த்த கண்களே
மீதி மேனி பார்ப்பதிந்த நாள்தானே
பால் நிலாவிலே பாய் விரிக்கையில்
நீயும் வந்து சாய்வதிந்த தோள்தானே
நீல வண்ண ஓடையில் நீங்கிடாத ஆசையில்
நீச்சல் போட நேரம் ஆச்சு

கோபாலன்... ராதையோடு போதையோடு
கீதை ஒன்று கூற வேண்டும்
கேட்டாலே... தேனும் பாலும் மேலும் மேலும்
மேனி எங்கும் ஊற வேண்டும்
வேறு வேலை ஏதும் இல்லை
காலை மாலை காதல் லீலை ஏராளம்..ஹேய்..(ராஜா)

வெட்கம் என்பது கூட வந்தது
உன்னைக் கண்டு ஓய்வு பெற்றுப் போயாச்சு
மோகம் என்பது யாரை விட்டது
ஆதி அந்தம் உந்தன் சொந்தம் ஆயாச்சு
தேவலோகம் தந்தது பாரிஜாதப் பூவிது
வண்டு வந்து பாட வேண்டும்

ராப்போது... காதல் சேதி காதில் கொஞ்சம்
மீதம் இன்றி பேச வேண்டும்
தூங்காமல்... துவண்டிடாமல் நீங்கிடாமல்
நீண்ட நேரம் ஆட வேண்டும்
கேள்வி கேட்க நேரம் இல்லை
சொர்க்க வாசல் தூரம் இல்லை வாய்யா வா..ஹேய்(ராஜா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.