காதலி காதலி காதலில் பாடல் வரிகள்

Movie Name
Avvai Shanmugi (1996) (அவ்வை ஷண்முகி)
Music
Deva
Year
1996
Singers
Hariharan
Lyrics
Vaali
காதலி... காதலி... காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

நாள் தோரும் வீசும் பூங்காற்றைக் கேளு என் வேதனை சொல்லும்
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொள்ளும்
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
இந்த ஈரம் என்று மாறுமோ...

(காதலி )

ஓயாத காமம் உண்டான வேகம் நோயானதே நெஞ்சம்
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம்
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமா ...

காதலி... காதலி... காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.