நாம் ஒருவரை ஒருவர் பாடல் வரிகள்

Movie Name
Kumari Kottam (1971) (குமரிக்கோட்டம்)
Music
M. S. Viswanathan
Year
1971
Singers
L. R. Eswari, T. M. Soundararajan
Lyrics
Vaali
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்


ப‌ட்ட‌ ப‌க‌லினில் நில‌வெரிக்க‌
அந்த‌ நில‌வினில் ம‌ல‌ர் சிரிக்க‌
அந்த‌ ம‌ல‌ரினில் ம‌து இருக்க‌
அந்த‌ ம‌து உண்ண‌ ம‌ன‌ம் துடிக்க‌
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்


நீர் குடித்த‌ மேக‌ம் என் நீல‌வ‌ண்ண‌ கூந்தல்
நீர் குடித்த‌ மேக‌ம் என் நீல‌வ‌ண்ண‌ கூந்தல்
அந்த‌ நீல‌வ‌ண்ண‌ கூந்த‌ல்
அது நீயிருக்கும் ஊஞ்ச‌ல்


பால் கொடுத்த‌ வெண்மை
என் ப‌ளிங்கு போன்ற‌ மேனி
பால் கொடுத்த‌ வெண்மை
என் ப‌ளிங்கு போன்ற‌ மேனி
வெண் ப‌ளிங்கு போன்ற‌ மேனி
அதில் ப‌ங்கு கொள்ள‌வா நீ


வ‌ட்ட‌ க‌ருவிழி வ‌ர‌வ‌ழைக்க‌
அந்த வ‌ர‌வினில் உற‌விருக்க‌
அந்த‌ உற‌வினில் இர‌விருக்க‌
அந்த‌ இர‌வுக‌ள் வ‌ள‌ர்ந்திருக்க‌
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள் !


நான் தொட‌ர்ந்து போக‌
எனை மான் தொடர்ந்த‌தென்ன‌
நான் தொட‌ர்ந்து போக
என்னை மான் தொடர்ந்த‌தென்ன‌
பொன் மான் தொட‌ர்ந்த‌போது
ம‌ன‌ம் மைய‌ல் கொண்ட‌தென்ன‌


வ‌டித்த‌ க‌ண்ணில் பெண் பொய் வ‌டித்த‌தென்ன‌
மை வ‌டித்த‌ க‌ண்ணில் பெண் பொய் வ‌டித்த‌தென்ன‌
க‌ண் பொய் வ‌டித்த‌ பாவை
என் கை பிடித்ததென்ன‌

வெள்ளி ப‌னி விழும் ம‌லையிருக்க‌
அந்த‌ ம‌லையினில் ம‌ழைய‌டிக்க‌
அந்த‌ ம‌லையினில் ந‌தி பிற‌க்க‌
அந்த‌ ந‌தி வ‌ந்து க‌ட‌ல் க‌ல‌க்க‌

நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் வலது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.