மாலை பொன் மாலை பாடல் வரிகள்

Movie Name
Udhayam NH4 (2013) (உதயம் NH4)
Music
G. V. Prakash Kumar
Year
2013
Singers
S.P.B. Charan
Lyrics
Vaali
மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே
(மாலை பொன்)

மடிமீது உனை வைத்து
மார்போடு அணைப்பேனே
இமை மூடும் இரவினிலே அடியே
பால் வீதி பயண வழி
நம் தேடல் நடக்குதடி
விண்மீன்கள் வெளிச்சத்திலே அடியே

நதிமீதினிலே பல கோடி நிலா
ஓ.. நீள்கிறதே கனவே
(மாலை பொன்...)

தோழிலே சாயும் உயரத்தில்
நீயும் இருப்பது பொருத்தமே
உதட்டிலே உதடு உரசிடும் போது
உயிரிலே அழுத்தமே
உள் நாக்கிலே தேன் துளி நீ
உன் தோளிலே கொடிமல்லி நான்
சொட்டு சொட்டாய் மழை துளி நீ
வெட்ட வெளி ஒற்றை பூ நான்
என் ஜன்னல் வானிலே
சட்டென்று திறக்குதே
பொன் வேளை நடுவிலே
மொட்டொன்று மலருதே
(ஹா... மாலை பொன்)

ஓ... விரல்களில் தவழும் கோப்பையில்
நிரம்பும் விலை இல்லா வைன் இவள்
இருளிலே எரியும் மெழுகினை போல
அழகிய ஒளி இவள்

கன்னம் சேர்த்து கைகள் கோர்த்து
வட்ட நிலா வானம் பார்த்து
ஒன்றாகுதே கண்கள் நான்கு
ஒற்றை கனா காணும் போது

ஒரு போர்வை கூடத்தில்
நம் சேர்ந்தே வசிக்கலாம்
சிரு வேர்வை பூக்களிள்
மலர் தோட்டம் விதைக்கலாம்
(மாலை பொன்)

மடிமீது உன்னை வைத்து
மார்போடு அணைப்பேனே
இமை மூடும் இரவினிலே அடியே
பால் வீதி பயண வழி நம் தேடல் நடக்குதடி
விண்மீன்கள் வெளிச்சத்திலே அடியே
நதிமீதினிலே பல கோடி நிலா
ஓ.. நீள்கிறதே கனவே
(மாலை பொன்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.