கூட வருவியா என் கூட வருவியா பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Valmiki (2009) (வால்மிகி)
Music
Ilaiyaraaja
Year
2009
Singers
Lyrics
Vaali

கூட வருவியா என் கூட வருவியா
கைகளோடு கைகள் கோர்த்து
காலம் முழுதும் விலகாமல்
பகலும் இரவும் பயணம் முழுதும்
பாதை மாறிப் போகாமல்
வழித் துணை என நீயும்
கடைசி வரையில் என்னோடு……..(கூட)

என்னை எடுத்து உந்தன் கையில்
என்று தந்தேன் என்று
இன்று நினைத்தேன் அன்று நடந்த
அந்த விந்தைகளை

மலர் வனம் பூப் பூப்பதும்
சிரம் தனில் தேன் தருவதும்
ஒரு மனம் ஓர் நொடியிலே
தன்னை இழந்தே தவிப்பதும்

என்னவென்று... ஆ... ஆ... ஆ...
என்னவென்று புரிந்ததின்று
இதற்கு எது இங்கு காரணம்
நீ இல்லாமல் வாழ்க்கை ஒன்று இனியேது (கூட)

யாரும் இல்லா காதல் தீவில்
உலகில் ஓர் மூலையில்
தன்னந்தனியே குடிலை அமைத்து
அன்பு பரிமாறலாம்

தடை வரும் கால தேவதை
மழலைகள் போல் வரட்டுமே
கந்தர்வ கானங்களின்
அமுதினைத் தான் தரட்டுமே

வெள்ளிப் பனியின்... ஆ... ஆ... ஆ...
வெள்ளிப் பனியின் மலையின் ஓரம்
வைர மணித் தேரின் ஊர்வலம்
கண்ணில் மின்னும் கன்னி கனவு நனவாக (கூட)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.