ரெக்க கட்டி பறக்குது பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Valmiki (2009) (வால்மிகி)
Music
Ilaiyaraaja
Year
2009
Singers
Rahul Nambiar, Tippu
Lyrics
Vaali

ரெக்க கட்டி பறக்குது நம்ம பேட்ட ஜித்து
கூட வந்து கூடி நின்னு கும்மாங்குத்து குத்து
அட இத்த போல சோடி அமைய லக் இருக்கணும்டா
அட இவள போல ஒருத்தி கெடைக்க
கொடுத்து வைக்கணும்டா

ஆட்டோக்கார மச்சான் வந்து
அமுக்கிக்கிட்டான் மச்சி
மீட்டருக்கு மேலே நைசா
கட்டிகிட்டான் மச்சி

அட சரக்கிருக்குது முறுக்கிருக்குது
சுதியக் கொஞ்சம் ஏத்து
பறபறக்கணும் தூள் பறக்கணும்
பட்டைய கெளப்பும் பாட்டு....(ரெக்க)

மீனப் புடிக்க ஒரு வல விரிப்பான்
இந்த மானப் புடிக்க இவன் எத விரிச்சான்
படா கில்லாடி நம்ம மச்சான் பாத்தியா
நம்ம மச்சானுக்கு மச்சம் எத்தன எண்ணிப் பாத்தியா

அட ஒனக்கு மச்சம்
எங்க இருக்கு பாத்தியா
நீ பொண்ணத் தேடி தலையில் வழுக்க
விழுந்து போச்சுயா

ஒனக்கிருக்குது எனக்கிருக்குது
எழுதி வெச்ச எழுத்து தான்
அட குடிச்சு எறிஞ்ச குப்பியும் சொல்லுது
எறக்கும் கணக்கு தான்.......(ரெக்க)

ஊர்வலத்தில் அப்ப ஊதிப்புட்டு
பேண்டு செட்டு இப்ப தூங்குதடா
ராவெல்லாம் மேட போட்டோம் பாத்தியா அந்த
சோடியோட போட்டோ புடிக்கும் சனத்தப் பாத்தியா

நம்ம வேலை எல்லாம்
முடிச்சுப் புட்டோம் நேர்த்தியா
இப்ப வெளையாட
சீட்டுக் கட்டு காத்திருக்குது யா

கொழம்பும் ரசமும் கொதி கொதிக்குது
வாசம் மூக்க தொளைக்குது
விருந்து வெக்கணும் பந்தி நடக்கணும்
வேலையப் பாருங்கடா....(ரெக்க)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.