எந்தன் வானின் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Kadhal Virus (2002) (காதல் வைரஸ் )
Music
A. R. Rahman
Year
2002
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்
வானம் உள்ளவரை வாழ்க என்றும்
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே

வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்
வானம் உள்ளவரை வாழ்க என்றும்
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே

எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே

எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே
நீயும் வளர் பிறையாக நிலவே…
நீயும் வளர் பிறையாக நிலவே
உயிரை தருவேன் காதல் நிலவே.. நிலவே…

எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே

வென்பனி நீ தூங்கிய புல்வெளி நான்
வென்னிலா நீ மின்னிய விண்வெளி நான்
வென்பனி நீ தூங்கிய புல்வெளி நான்
வென்னிலா நீ மின்னிய விண்வெளி நான்
மின்னல் கோடி சேர்த்து வைத்து நீ சிரித்த காட்சிகள்
யாவும் இன்று மாயமாக யாரை கேட்க சாட்சிகள்
உன்னை எண்ணி வாழ்ந்த காலம், கண்கள் ரெண்டும் ஈரமாக
காதல் ஒன்றும் காயமல்ல, காலப்போக்கில் ஆறி போக
நெஞ்சம் எல்லாம் வாடுதே தழும்புகளால்

எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே
எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே

என்னை விட்டு போனது அமைதியன்றோ
நீயும் இல்லா நானுமே அகதியன்றோ
நூறு கோடி ஆண்டு காலம் வாழ்வதிங்கு வீணடி
எந்தன் காதல் நீ அறிந்தால் போதும் அந்த ஓர் நொடி
புல்லின் மீது போகும் போதும் கால் சிவந்த மென்மை நீ
கல்லின் மீது நீயும் இங்கே போவதென்ன கண்மணி
இந்த ஜென்மம் வாழ்வதே உனக்கென தான்

எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே
நீயும் வளர் பிறையாக நிலவே
உயிரை தருவேன் காதல் நிலவே.. நிலவே…
எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே

வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்
வானம் உள்ளவரை வாழ்க என்றும்
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே

வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்
வானம் உள்ளவரை வாழ்க என்றும்
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.