ஓம் நமஹ உருகும் பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Idhayathai Thirudathe (1989) (இதயத்தை திருடாதே)
Music
Ilaiyaraaja
Year
1989
Singers
Mano, S. Janaki
Lyrics
Vaali
ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
நூலாடை விலகி விலகி நீரோடை பெருகி வழியும் வேளை
முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
மெல்லிய மேனியும் சில்லென ஆனது
வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது
ஏடென்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.