கோடி முத்துக்களை நாளும் பாடல் வரிகள்

Movie Name
Thai Mozhi (1992) (தாய்மொழி)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
Mano, S. Janaki
Lyrics
Vaali

கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
வாழ்வே நீ தானம்மா எங்கள் தாயே
பூ அலை தாளம் தட்ட வான் வரை பாடல் எட்ட
நீ ஒரு மேடை கட்ட நான் அதில் ராகம் கொட்ட...(கோடி)

வானை முட்டும் நீர்வீழ்ச்சியும்
வாராமல் போகாது உன் வீடு
நீலப் பட்டுச் சேலை கொண்டு
தாளத்தில் தாலாட்டும் பண் பாடு

ஆழம் என்ன கண்டார் இல்லை
ஆராய்ச்சி தான் என்றும் ஓயாது
காலம் பல ஆனால் என்ன
காண்கின்ற உன் தோற்றம் காயாது

தாராளம் உந்தன் தங்க மடி என்று
பேர் சொல்லும் கோலம் வந்ததடி இன்று
நீர் தந்து நீர் தந்த நீதானே
கோடி முத்துக்களைநாளும் வாரி அள்ளித் தரும்

நீர் இல்லையே வாழ்வில்லையே
பாரெங்கும் பேர் சொல்ல சீர் இல்லையே
ஆறில்லையேல் ஊர் இல்லையே
நீர் இல்லை நான் இல்லை நாம் இல்லையே

கேள் என்று தான் கேட்டேனம்மா
ஓங்காரம் உன் ராகம் ஓய்வில்லையே
உன் ஜென்மமோ பார்த்தேனம்மா
ஒன்றே தான் உன் வாழ்வில் தேய்வில்லயே

கண்டாரும் இல்லை எங்கும் தடை இல்லை
நின்றாடும் அலை நின்றால் எதும் இல்லை
ஆதாரம் வேறேது நீர் தானே
கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.