ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா பாடல் வரிகள்

Movie Name
Thai Mozhi (1992) (தாய்மொழி)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. Janaki
Lyrics
Vaali

ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா
ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா
இளமை சென்றால் அது இனிமை உண்டாவதேது
காலம் பொன்னானது கனிவாய் கொண்டாடுது..(ஜின்ஜிலாரா)

நீரில் நின்ற போதும் தீயில் துள்ளும் தேகம்
மோகம் தாகம் சேர தொடாமல் பார்த்து
பாரிஜாதம் பூக்க பாவை மேனி வேர்க்க
பார்வை அம்பு பாய சுகம் அள்ளிச் சேர்த்து
முத்தாடும் நேரம்

தத்தை மீது தத்தை ஒன்று தத்திச் செல்ல
தொட்டாலே போதும்
நெஞ்சோடு மெத்தை இட்டு வித்தை சொல்ல
முல்லை சிரிப்பால் கொள்ளை அடிப்பேன்
பொன் மேனி தேயும் போது சொர்க்கம்தான்..(ஜின்ஜிலாரா)

காதல் பேசும் கிள்ளை காமன் தோட்ட முல்லை
கால காலம் தோறும் கையோடு கூட
ஆடை மூடும் பலா ஆசைத் தேன் பலாவா
ஆடும் வெண்ணிலாவா நெஞ்சோடு ஆட
கண் மூடும் வேளை

சிட்டு மேனி கட்டுப்பாடு விட்டுப் போக
கள்ளூறும் சோலை
உள்ளூர இன்பம் தொட்டு துள்ளிப் பாய
முல்லை சிரிப்பால் கொள்ளை அடிப்பேன்
பொன் மேனி தேயும் போது சொர்க்கம்தான்..(ஜின்ஜிலாரா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.