மதுர வீரன் சாமி சாமி பாடல் வரிகள்

Movie Name
Thai Mozhi (1992) (தாய்மொழி)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
Ilaiyaraaja
Lyrics
Piraisoodan

ஹோய் மதுர வீரன் சாமி சாமி
உள்ளதெங்க பாண்டி பூமி பூமி
ஹோய் கையெடுத்து கும்பிடுவோம்
கை கொடுக்கும் நம்பிடுவோம்
மங்கலமாக கொலவ போடு
பொங்கல படச்சு பூச போடு போடு ஹோய் (மதுர)

மதங்கள் பல ஆனாலும்
நோக்கம் அனைவருக்கும் ஒன்று
அன்பும் கருணையும் இறைவன் தந்தது
இனிமையும் இன்பமும் எங்கிலும் நிறைந்தது
அன்புடன் இன்பமாய் அனைவரும் வாழ்வோம்.ஆமேன்...

இன்னாரு இன்ன சாதி இன்னார்க்கு இன்ன நீதி
என்றெல்லாம் சாமிக்கில்லையே
சாமியச் சுத்திச் சுத்தி வந்தாலும் இந்த புத்தி
எந்நாளும் பூமிக்கில்லையே

வீச்சருவா கையில் கொண்டு
வினை அறுக்க வந்த சாமி
சூட்சுமத்த உள்ள வெச்சு
பகை முடிக்க நின்ற சாமி

பக்தர்களை ஆதரிக்கும் பாவிகளை வேரறுக்கும்
நல்லவர்க்கெல்லாம் காவல் நிற்கும்
நான் பாட எந்தன் நாவில் நிற்கும்.....(மதுர)

தெய்வங்கள் தமக்குள்
சண்டை இட்டுக் கொள்வதில்லை
மனிதர்களை மனிதனே துன்புறத்த வேண்டுமா
போன உயிர் மீண்டும் இங்கு திருப்பித் தரக் கூடுமா
அன்புடன் இன்பமாய் அனைவரும் வாழ்வோம்

சாமியின் பேரச் சொல்லி
சண்டைகள் போட்டுப் போட்டு
பூமியே கெட்டுப் போச்சு டா
கொண்டாடும் சாமி எல்லாம்

உண்டான சண்ட பாத்து
கோயில விட்டுப் போச்சு டா
அடுத்தவனின் தவறுகள
கணக்கெழுதிப் பாக்குறவன்

அவன் கணக்கு சாமி கிட்ட
இருக்குறத மறந்திடுவான்
ஊர் முதுக பாக்கும் முன்னே
உம் முதுக பாத்துக்க டா
பாவத்தப் பாத்தா பூமி மேலே
பாரத்தப் போடு சாமி மேலே.....(மதுர)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.