போர்க்களம் அங்கே பாடல் வரிகள்

Movie Name
Thenali (2000) (தெனாலி)
Music
A. R. Rahman
Year
2000
Singers
Srinivas
Lyrics
Piraisoodan
போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே
உயிரின் உயிலும் எங்கே
காதலின் போரிலே
கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே
களவு போனதெங்கே
உயிர் கரைந்து போகுதெங்கே??

போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே
உயிரின் உயிலும் எங்கே

உன்னை எங்கு பிரிகிறேன்
உனக்குள் தானே வாழ்கிறேன்
அன்பில் உன்னை அளக்கிறேன்
அனிச்சை செயலாய் நினைக்கிறேன்

உன்னை எங்கு பிரிகிறேன்
உனக்குள் தானே வாழ்கிறேன்
அன்பில் உன்னை அளக்கிறேன்
அனிச்சை செயலாய் நினைக்கிறேன்

நீயும் சொன்ன சொல்லை நம்பி
இன்னும் உலகில் இருக்கிறேன்

உனது முகமும் அசையும் திசையில்
எனது உதயம் பார்க்கிறேன்

உன்னிலே என்னை நான்
தேடி தேடி வருகிறேன்

போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே
உயிரின் உயிலும் எங்கே
காதலின் போரிலே
கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே
களவு போனதெங்கே
உயிர் கரைந்து போகுதெங்கே??

போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே
உயிரின் உயிலும் எங்கே

பேச மறந்து சிரிக்கிறேன்
பிரிந்தும் உயிராய் இருக்கிறேன்
பார்வை இன்றி பார்க்கிறேன்
பகலில் இருட்டாய் இருக்கிறேன்

உனக்கு பிடித்த உலகம் வாங்கி
உன்னை அங்கு வைக்கிறேன்
நிமிடம் நிமிடம் கனவில் நினைவில்
குடித்தனம் நான் செய்கிறேன்

இறப்பிலோ பிறப்பிலோ
உன்னில் நானே வாழ்கிறேன்

போர்க்களம் இல்லை
பூவில் காயம் இல்லை
புன்னகை தீவில்
உயிரும் தேவை இல்லை

போர்க்களம் இல்லை
பூவில் காயம் இல்லை
புன்னகை தீவில்
உயிரும் தேவை இல்லை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.