Paattu Oru Paattu Lyrics
பாட்டு ஒரு பாட்டு பாடல் வரிகள்
Last Updated: Mar 26, 2023
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து (பாட்டு)
கேளம்மா உனது விதை நானம்மா
விதைத்த விதை பூக்கும் காய்க்கும்
வருங்காலம் தானம்மா
தாய்மடி தழைத்து வரும் பூஞ்செடி
தலை வணங்கும் கோயிலென்றும்
அம்மா உன் காலடி
நீயின்றி நானும் இல்லை
நீரின்றி மீனும் இல்லை
நடமாடும் பிள்ளை நானே
நீ போட்ட பிச்சை தானே.....(பாட்டு)
யோகம்தான் மகன் பிறக்கும் நேரம்தான்
வசந்தமென வாசல் தோறும்
பூப்பூக்கும் காலம் தான்
போற்றுவாள் கடமைகளை ஆற்றுவாள்
இளைய மகன் வாழும் வீட்டில்
தீபங்கள் ஏற்றுவாள்
ஊர் பேசும் இமயம் கூட
தாய் போல உயரமில்லை
நான் பேசும் தமிழில் கூட
தாய்மைக்கு விளக்கம் இல்லை (பாட்டு)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.