Kavalukku Pona Kovakkari Lyrics
காவலுக்கு போனா கோவக்காரி பாடல் வரிகள்
Last Updated: Jun 04, 2023
காவலுக்கு போனா கோவக்காரி
காதலிச்சு ஆனா வீட்டுக்காரி
என்னாச்சு என்னாச்சு தாகம் நெஞ்சில் உண்டாச்சு
ஒண்ணாச்சு ஒண்ணாச்சு தேகம் ரெண்டும் ஒண்ணாச்சு
காதல் தேனை பருகி பருகி தினமும் ரசிக்கலாம் (காவலுக்கு)
நான் புது முகம் இனிதான் அனுபவம்
ஏன் அவசரம் தருவேன் அதிசயம்
காமன் ஊரிலே காற்றில் போகலாம்
காதில் ஆயிரம் சேதி கூறலாம்
பாதி என்னில் நீயும் மீதி உன்னில் நானும்
தேடும் இன்பம் நூறு தேடி மெல்ல பாரு (காவலுக்கு)
நாள் முழுவதும் நினைத்தால் சுடுகிறாள் ஐயோ
என் கனவிலே அணைத்தால் குளிர்கிறாள்
காற்று தீண்டினால் காயமாகுதே
காவல் மீறவே ஆசையாகுதே
பாரம் நெஞ்சில் ஏறும் மோகம் எல்லை மீறும்
பேச்சு இன்று போகும் பார்வை மட்டும் பேசும் (காவலுக்கு)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.