கண்ணாடி நீ கண் ஜாடை பாடல் வரிகள்

Movie Name
Mankatha (2011) (மங்காத்தா)
Music
Yuvan Shankar Raja
Year
2011
Singers
Bhavatharani, S.P.B. Charan
Lyrics
Vaali
கண்ணாடி நீ கண்ஜாடை நான்..
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..
என் தேடல் நீ உன் தேவை நான்..
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..
என் பாதி நீ உன் பாதி நான்..
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்..

கண்ணோடு வா நீ ஹே ஹே
மோக தளம் போடு நீ ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டு செல்ல..

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்..

என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்
எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்
உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள

கண்ணாடி நீ கண்ஜாடை நான்..
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..
என் தேடல் நீ உன் தேவை நான்..
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..

துரம் எல்லாமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
வீரம் கொண்டாடும் கலைஞனாக
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக
தீராத போர் ஒன்று நீர் தந்து என்னை வெல்ல

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.