Chinna Kutty Lyrics
சின்னக் குட்டி மீனா பாடல் வரிகள்
Last Updated: Jun 02, 2023
ஹே..சின்னக் குட்டி மீனா சினிமா பாக்க போனா
பிரபுவத்தானே பார்த்து பித்து பிடிச்சவள் ஆனா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஷோவும்
கிளுகிளுப்பாக பார்த்தாளாம்
ராத்திரி நேரம் பார்த்ததையெல்லாம்
பகலில நெனச்சு வேர்த்தாளாம் (சின்ன)
சூரக்கோட்டை மச்சானே
சொக்குப்பொடி வச்சானே
சின்னக் குட்டி மனசுக்குள்ளே அவன்
பச்சக் குத்தி வச்சுக்கிட்டா வயசுப் புள்ளே
சென்னப் பட்டணம் போகத்தான்
சினிமா ஸ்டாரா ஆகத்தான்
இளையத்திலகம் கூடத்தான்
டூயட் ஒண்ணு பாடத்தான்
நித்தம் நித்தம் அவ மெட்டு படிக்க
நெஞ்சுக்குள்ள தாளம் தகதிமிதோம் தகதிமிதோம் (சின்ன)
நானும் கலைஞனம்மா
தெம்மாங்கு பாடும் இளைஞனம்மா
நடிகர் திலகம் பிள்ளையைப் போலே
நான் வருவேனே புரவியின் மேலே
ஆத்தா துணையிருப்பா இங்கே
நான் கேட்கும் வரம் கொடுப்பா
கண்ணீர் சிந்தி வாடும்போது
கண்ணு தொறக்க வேண்டும்போது
பார்வை மலர்ந்திருப்பா
எங்கம்மா பாசக் குரல் கொடுப்பா
என்னைப் போலே ஏழைக் கொண்ட
எண்ணமெல்லாம் கை கூடும்
சின்னக் குட்டி மீனாவுக்கு ஆசை கூட ஈடேற
அம்மன் கோயிலிலே ஆடும் வேளையிலே
எல்லார்க்கும் எல்லாமும்
என்றும் இங்கு கிடைக்கும்.....(சின்ன)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.