Paattu Oru Paattu Lyrics
பாட்டு ஒரு பாட்டு பாடல் வரிகள்
Last Updated: Jun 04, 2023
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து (பாட்டு)
சோதனை தொடர்ந்து வரும் வேதனை அதை
எதிர்த்து வாழ்ந்துக் காட்டு அதுதானே சாதனை
நேர்மையும் உறுதியுள்ள நெஞ்சமும்
இருக்கும் வரை மண்ணில் ஏது முடியாத காரியம்
நீங்காத பாசம் கொண்டு
நிலையான நேசம் கொண்டு
வாழ்கின்ற பிள்ளை ஒன்று வாயார பாடும்
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
தந்தையும் மடி சுமந்த அன்னையும் முகத்தின்
இரு கண்கள் என்று மகன் போற்ற வேண்டுமே
கண்களை இமைகளென காத்திட
பிறந்த மகன் காலந்தோறும் பணியாற்ற வேண்டுமே
விடியாத இரவும் இல்லை
வெளுக்காத கிழக்கும் இல்லை
வரக்கூடும் காலம் நேரம்
வசந்தங்கள் நம்மை சேரும்..... (பாட்டு)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.