அம்மா பதில் சொல்லடி பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Porantha Veeda Puguntha Veeda (1993) (பொறந்த வீடா புகுந்த வீடா)
Music
Ilaiyaraaja
Year
1993
Singers
S. Janaki
Lyrics
Vaali
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா
பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி...

வாசனை பன்னீரில் நித்தமே நீராடி
வேளைக்கொரு அலங்காரம் காண்பதென்ன
வேதனை கண்ணீரில் என்னை நீ நீராட்டி
தூரம் நின்று வாய் மூடி பார்ப்பதென்ன

திருவடியில் சரணம் சரணம்
என துதி புரியும் பொழுது
அலை அலையா துயரம் பெருக
என வதைப்பதுவோ அழகு
விதியா வினையா உனைக் கேட்டேன் தாயே

அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா
பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி

தேவியே நீ கூட தக்ஷனின் மகளாக
மாலையிட்ட சிவனோடு வாழ்ந்திருந்தாய்
தாயென உனைக் காத்த தந்தையின் மனைத் தேடி
நாயகன் சொல் கேளாமல் ஓடி வந்தாய்

புகுந்த இடம் நலமும் வளமும் பெற
அனுதினமும் உழைத்தேன்
பிறந்த இடம் தவிக்கும் தருணம்
கொண்ட உடன் பிறப்பை அணைத்தேன்
சரியோ தவறோ உனைக் கேட்டேன் தாயே

அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா
பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.