பொங்கலோ பொங்கலைய்யா பாடல் வரிகள்

Last Updated: Mar 22, 2023

Movie Name
Porantha Veeda Puguntha Veeda (1993) (பொறந்த வீடா புகுந்த வீடா)
Music
Ilaiyaraaja
Year
1993
Singers
Malasiya Vasudevan
Lyrics
Vaali
பொங்கலோ பொங்கலைய்யா
என் பொண்டாட்டி புத்தி மங்கலய்யா
டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்

கும்பலோ கும்பலய்யா மாடியிலே பெண்களய்யா
வீட்டுக்குள்ள இருந்தாலும் இல்ல
வெளியிலதான் திரிஞ்சாலும்
எப்பவுமே நான்தான் சிங்கிளய்யா ஹேய்...

அடி ஆம்படையான் என்றாலே
அடங்கி கிடக்கும் ஜடமா ஹோய் ஹோய்
ஒரு சாம்பிளுக்கு இப்போது சரக்க அவுத்து விடவா
உதட்டு சாயம்தான் வெளுக்கும் நேரந்தான்
வெளுத்தா தெரியுமே உங்க லட்சணம் லட்சணம் தான்

நாலு அடியிலே சவுரி முடியிலே
வேற வழியில்லே அழகா பொழப்பு நடக்குது
நம்ம வாத்தியாரு அண்ணாத்த வெவரம் புரிஞ்ச ஆளுடா
அங்க பாத்தியாடா பிஸ்தா போல் வெடச்சி கெடக்கு தோளுடா

ரிக்ஸா மிதிக்கிறோம் கிஸ்தா பொழைக்கிறோம்
மாடா ஒழைக்கிறோம் அதத்தான் மாத்திக்க ஊத்திக்கிறோம்
அடி கல்புதான் அடிச்சா சில்புதான் ஆந்திரா சரக்குதான்
இன்னிக்கு பொங்கலோ பொங்கல்தான்

நம்ம வாத்தியாரு அண்ணாத்த வெவரம் புரிஞ்ச ஆளுடா
அங்க பாத்தியாடா பிஸ்தா போல் வெடச்சி கெடக்கு தோளுடா

மாடியிலே மாதர்சங்கம் மீட்டிங்குதான் நடக்குதப்பா
நாலெழுத்து படிச்சதெல்லாம் வேலக் கெட்டு அளக்குதப்பா
இந்த லில்லியம்மா பிள்ள பெத்து போட்டா
தாய்ப்பால் கொடுக்க ஒத்துக்கவே மாட்டா

அந்த காரணத்த நாம கொஞ்சம் கேட்டா
இவ கட்டழகு கெட்டுடுமாம் வேர்த்தா
அட பார்த்தாலும் பார்த்தேன்டா பேயாட்டம் பொம்பள
ஆத்தாடி எல்லாமே வாயாடி பொம்பள

நம்ம வாத்தியாரு அண்ணாத்த வெவரம் புரிஞ்ச ஆளுடா
அங்க பாத்தியாடா பிஸ்தா போல் வெடச்சி கெடக்கு தோளுடா

சேவல்கள கேவலமா பேசுகிற கோழிகளே
சேர்ந்திருக்கும் குடும்பத்தையே
பிரிச்சி வைக்கும் கூனிகளே
உங்க புருஷன்காரன் போட்டுப்புட்டான் மாலை
அந்த பாவத்துக்கு தொவைக்கணுமா சேல

நீங்க சங்கம் வச்சு உருப்படுமா நாடு
உங்க சங்கதிதான் ரொம்ப வெட்கக்கேடு
படா ஜோராக உட்டாரு வாத்யாரு டோசுதான்
பீஸ் பீஸா போயாச்சு பேஜாரு கேசுதான்

அடி ஆம்படையான் என்றாலே
அடங்கி கிடக்கும் ஜடமா ஹோய் ஹோய்
ஒரு சாம்பிளுக்கு இப்போது சரக்க அவுத்து விடவா

ரிக்ஸா மிதிக்கிறோம் கிஸ்தா பொழைக்கிறோம்
மாடா ஒழைக்கிறோம் அதத்தான் மாத்திக்க ஊத்திக்கிறோம்
அடி கல்புதான் அடிச்சா சில்புதான் ஆந்திரா சரக்குதான்
இன்னிக்கு பொங்கலோ பொங்கல்தான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.