ஆடி வெள்ளி புத்துக்கு பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Aadi Viratham (1991) (ஆடி விரதம்)
Music
A. L. Vijay, Shankar-Ganesh
Year
1991
Singers
Swarnalatha, M. S. Rajeswari, K. S. Chitra
Lyrics
Vaali
ஆடி வெள்ளி புத்துக்கு பால் விட்ட யோகம் நல்ல யோகம்
பத்தாம் மாசம் மாணிக்கம் தந்தது நாகம் ராஜ நாகம்
தேடி வந்த செல்வம் திருப்பி கொடுக்க முடியுமா
பேச்சுக்குக்காக சொன்னால் வானம் என்ன விடியுமா
வம்பு ஏம்மா போம்மா...

ஆடி வெள்ளி புத்துக்கு பால் விட்ட யோகம் நல்ல யோகம்
பத்தாம் மாசம் மாணிக்கம் தந்தது நாகம் ராஜ நாகம்
வாங்கி வந்த செல்வம் வரவு அல்ல இரவல் தான்
வார்த்தை தவறிப் போனா விடுவதில்லை தெய்வம் தான்
வம்பு ஏம்மா தாம்மா...

ஆடி வெள்ளி புத்துக்கு பால் விட்ட யோகம் நல்ல யோகம்
பத்தாம் மாசம் மாணிக்கம் தந்தது நாகம் ராஜ நாகம்

முக்குளிச்சி முத்தெடுத்தால் உப்புக் கடல் கேட்குமா
உப்புக் கடல் கேட்டா அத ஒப்படைக்க வேண்டுமா
கடல் தான் இல்லையென்றால் முத்துச்சிப்பி ஏதம்மா
கடனாய் கொடுத்ததை நீ மறுப்பதிங்கே ஞாயமா

மேகத்தில் தோன்றிய மாமழை நீருந்தான்
பூமிக்கு சொந்தமாய் ஆகுது
பூமியின் தாகத்தை தீர்த்ததும் மீண்டும் தான்
ஆவியாய் வானத்தில் போகுது

உவமை கதைகள் என்னம்மா
அடி உரிமை உனதா சொல்லம்மா
பெற்ற தாய் இங்கு நானம்மா
தெய்வத்தாய் இந்த நாகம்மா..ஆஆஆ.....

ஆடி வெள்ளி புத்துக்கு பால் விட்ட யோகம் நல்ல யோகம்
பத்தாம் மாசம் மாணிக்கம் தந்தது நாகம் ராஜ நாகம்
தேடி வந்த செல்வம் திருப்பி கொடுக்க முடியுமா
வார்த்தை தவறிப் போனா விடுவதில்லை தெய்வம் தான்
வம்பு ஏம்மா போம்மா...

ஆடி வெள்ளி புத்துக்கு பால் விட்ட யோகம் நல்ல யோகம்
பத்தாம் மாசம் மாணிக்கம் தந்தது நாகம் ராஜ நாகம்

தாயின் பசி தீர்த்தது இந்த தங்க மகள் தானம்மா
என் மடியில் தாங்கி நின்றேன் ஐயிரண்டு மாதமா
பானையில் சோறிருந்தா பானைக்கு அது சொந்தமா
ஆக்கிடும் கைகளின்றி அன்னம் இங்கே ஏதம்மா

தாங்கிய புஷ்பத்தை பூங்கொடி கிட்டேயே
தாவென்று கேட்பது ஞாயமா
பூஜைக்குத்தான் இந்த பூ இங்கு பூத்தது
தெய்வத்தை ஏய்ப்பது ஏனம்மா

தரவே மாட்டேன் எந்நாளும்
உன்னை விடவே மாட்டேன் எப்போதும்
தண்டித்தால் அதை தாங்குவேன்
வட்டிக்கு வட்டி வாங்குவேன்...ஆஆஆ...
ஆடி வெள்ளி புத்துக்கு பால் விட்ட யோகம் நல்ல யோகம்

ஆடியாம் வெள்ளியாம்
ஏதேதோ சொல்லுறா ஆத்தா என்ன பாத்தா
அர்த்தம் என்ன ஒண்ணுமே தோணல எனக்கு
அர்த்தம் என்ன ஒண்ணுமே தோணல எனக்கு
என்ன வழக்கு

ஆடியாம் வெள்ளியாம்
ஏதேதோ சொல்லுறா ஆத்தா என்ன பாத்தா....இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.