எனக்கென பிறந்தவ பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Kizhakku Karai (1991) (கிழக்குக் கரை)
Music
Deva
Year
1991
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
ஆண் : ம்கும்..ஐ லவ் யூ..லவ்யூ
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோஓஓ..


பெண் : ஓஒ ஓஓ ஓஓ ஓஓ
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

(இசை) சரணம் - 1

பெண்குழு : லாலாலா லா லா
லாலாலா லா லா லா

ஆண் : மாஞ்சிட்டு மேடை போட்டு
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா

பெண் : ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அனல் மூச்சு வாங்கினாள்

ஆண் : பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு

பெண் : உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெப்பம் உண்டாச்சு

ஆண் : மயங்காதே மாலை மாத்த
மாமன் வந்தாச்சு

பெண் : உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

(இசை) சரணம் - 2

பெண்குழு : லாலா லாலலா
லாலா லாலலா

பெண் : நீ சூட்டும் பூவுக்காக
நெடுங்கூந்தல் ஆடுது
நீ வைத்த பொட்டுக்காக
நடுநெத்தி வாடுது

ஆண் : ஆத்தாடி உன்னைத்தானே
உயிர் நாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடலோடு கூடுது

பெண் : அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட

ஆண் : மையல் எழுதி மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட

பெண் : அடங்காது ஆசைக்கொண்டு
நானும் போராட
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்

ஆண் : ஆ ஆ ஆஹா

பெண் : என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

ஆண் : ஆ ஆ ஆஹா

பெண் : ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோஓஒ..

ஆண் : ஆஆ..ஆஆ..ஆஆ.
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.