ராசா என் ராசா உன்ன நான்தான் பாடல் வரிகள்

Last Updated: May 30, 2023

Movie Name
Kanmaniye Pesu (1986) (கண்மணியே பேசு)
Music
Raveendran
Year
1986
Singers
S. Janaki
Lyrics
Vaali

ராசா என் ராசா உன்ன நான்தான்
விடவே மாட்டேன்
மயக்கம் ஒரு மயக்கம் உன்னப் பாத்தா
அது ஏன் கேட்டேன்

ஆளக் கண்டதும் ஆச வைக்கிற
வயசுப் பொண்ணுங்கதான்
வாடப் பட்டதும் வளைஞ்சு நிக்கிற
வாழக் கன்னுங்கதான்
மஞ்சக் குளிக்கிற வஞ்சிக் கொடிகளின்
நெஞ்சம் இனிச்சிட வாய்யா இங்கு

ராசா என் ராசா உன்ன நான்தான்
விடவே மாட்டேன்
மயக்கம் ஒரு மயக்கம் உன்னப் பாத்தா
அது ஏன் கேட்டேன்

எல்லாரும் கொண்டாடும் செல்லக்குட்டி
நீதான் எங்கேயும் தித்திக்கும் வெல்லக்கட்டி
கண்ணாலம் பண்ணாத அத்தப் பொண்ணு
என்ன கட்டிக்க பாக்கலாம் வித்த ஒண்ணு

நீதானே சின்னப் பிஞ்சு
ரெக்க வைக்காத குருவிக் குஞ்சு
பூவாட்டம் வெள்ளை நெஞ்சு
உன் பொஞ்சாதி என்னக் கொஞ்சு

மீச வைக்கிற வயசு வந்திடும்
ஆச வைக்கிற மனசு வந்திடும்
மேளம் கொட்டுற காலம் வந்திடும்
தாலி கட்டிடும் வேளை வந்திடும்
உன நான் விடவே மாட்டேன்

ராசா என் ராசா உன்ன நான்தான்
விடவே மாட்டேன்
மயக்கம் ஒரு மயக்கம் உன்னப் பாத்தா
அது ஏன் கேட்டேன்

போகாதே போகாதே என் கணவா
நானும் பொல்லாத சொப்பனம் கண்டிடவா
இப்போதும் எப்போதும் உன் நெனவா
நானும் ஏங்கித்தான் நின்னேனே எங்கிட்ட வா

பாலூட்டி தாலாட்டுவேன் உன்ன
தாயாட்டம் பாராட்டுவேன்
வாலாட்டும் சின்னப் புள்ள உன்ன
வச்சேனே நெஞ்சுக்குள்ளே

மூக்கு முழியும் மழலை மொழியும்
பாக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும்
பாட்டுக் குயிலும் பச்சக்கிளியும்
சேர்ந்து வந்தது போல இருக்கும்
உன நான் அணைச்சா இனிக்கும்

ராசா என் ராசா உன்ன நான்தான்
விடவே மாட்டேன்
மயக்கம் ஒரு மயக்கம் உன்னப் பாத்தா
அது ஏன் கேட்டேன்

ஆளக் கண்டதும் ஆச வைக்கிற
வயசுப் பொண்ணுங்கதான்
வாடப் பட்டதும் வளைஞ்சு நிக்கிற
வாழக் கன்னுங்கதான்
மஞ்சக் குளிக்கிற வஞ்சிக் கொடிகளின்
நெஞ்சம் இனிச்சிட வாய்யா இங்கு

ராசா என் ராசா உன்ன நான்தான்
விடவே மாட்டேன்
ராசா என் ராசா உன்ன நான்தான்
விடவே மாட்டேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.