வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் பாடல் வரிகள்

Movie Name
Kanmaniye Pesu (1986) (கண்மணியே பேசு)
Music
Raveendran
Year
1986
Singers
K. S. Chithra
Lyrics
Gangai Amaran

வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்

பாவைய பூவென பாருங்க மாமா
பாத்ததும் தேவைய கேளுங்க ஆமா
தெரிஞ்சவ அறிஞ்சவ சொல்லுறத கேட்டுக்கணும்
வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்

பாலு பழங்கள பாரு பருகுவதாரு நீங்கிட சாறு
அட ஆள அணைக்கிற தோளு
கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு

பாலு பழங்கள பாரு பருகுவதாரு நீங்கிட சாறு
அட ஆள அணைக்கிற தோளு
கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு

நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க
நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க
கட்டிலறை இங்கு முதல் நடுங்கிட
தொட்டிலிட முதல் முதல் விதையிட
உயிரும் உயிரும் உயிரை வளர்க்கும்..ஓஓஒ...

வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்

காலம் அது தரும் கோலம்
பருவங்கள் நாலும் கடந்தது என்ன
நாளும் சுகமென காணும் சுவை பல தோணும்
நிலவரம் என்ன

காலம் அது தரும் கோலம்
பருவங்கள் நாலும் கடந்தது என்ன
நாளும் சுகமென காணும் சுவை பல தோணும்
நிலவரம் என்ன

நீரூற்று நிலம் பாயட்டும் இனி
நிலம் நூறு நிறம் காணட்டும்
நீரூற்று நிலம் பாயட்டும் இனி
நிலம் நூறு நிறம் காணட்டும்

நித்தம் ஒரு புது புது அனுபவம்
நெஞ்சிலொரு புதுவித சுகம் வரும்
வளர வளர தொடரும் அதிசயம்...

வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
பாவைய பூவென பாருங்க மாமா
பாத்ததும் தேவைய கேளுங்க ஆமா
தெரிஞ்சவ அறிஞ்சவ சொல்லுறத கேட்டுக்கணும்

வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.