ராசிப் பொருத்தம் உண்டு பாடல் வரிகள்

Movie Name
Poove Ilam Poove (1987) (பூவே இளம் பூவே)
Music
Amal Dev
Year
1987
Singers
Malaysia Vasudevan, S. P. Sailaja
Lyrics
Gangai Amaran

தமிழ்நாட்டு ஹீட்டை எல்லாம்
தணிச்சு விடும் ஊட்டியிலே
அழகான அருமை மிகும்
அண்ணா கலைக் கல்லூரியிலே

நடக்கும் இந்த நிகழ்ச்சியிலே
எடுத்து விட்ட சீட்டினிலே
நம்ம மாப்பிள்ளை பேர்....போடு...
இந்த பொண்ணு பேர்...ராதா
ரெண்டு பேரும் பாட்டுகள
அவுத்து விட போறாங்கடா.....

குழு : ராசிப் பொருத்தம் உண்டு
ஜோடி பொருத்தம் உண்டு
ஆண் : மனசு பொருத்தமில்லையே
எனக்கு இவள புடிக்கவில்லையே

குழு : ஹே...ராசிப் பொருத்தம் உண்டு
ஜோடி பொருத்தம் உண்டு
ஆண் : மனசு பொருத்தமில்லையே
எனக்கு இவள புடிக்கவில்லையே...

ஆண் : இவள எப்படி நான்
கல்யாணம் பண்ணிக்குவேன்
அதுக்கு கழுதையையோ
குதிரையையோ மேய்ச்சுக்குவேன்

பெண் : ராசிப் பொருத்தமுண்டு
ஜோடி பொருத்தமுண்டு
மனசு பொருத்தமில்லையே
எனக்கு இவன புடிக்கவில்லையே

இவன எப்படி நான்
கல்யாணம் பண்ணிக்குவேன்
அதுக்கு ஆத்துலையோ
குளத்திலையோ வீழ்ந்துக்குவேன்

குழு : அடி அப்படி நீ சொல்லாதே
தப்பு வழி போகாதே
நல்ல பையன் கட்டிக் கொள்ளடி
நீ இஷ்டப்பட்டு ஒட்டிக் கொள்ளடி

பெண் : ஆள் அம்பு சேனைகளோடு
எங்க அப்பாரு கட்டி வச்ச வீடு
அழகான மாருதி காரு
இன்னும் ஏராளம் வசதிகள் நூறு

அதில ஒண்ணாச்சும்
வாங்கி தர வக்கு இல்லை
இந்த மாப்பிள்ளையை போல
ஒரு மக்கு இல்லை

அட என் கழுத்தில் தாலிக் கட்ட
எட்டு வகை லட்சணமும்
இந்த ஊரு மாப்பிளைக்கு இல்லை இல்லை
அட எனக்கு இந்த கல்யாணம் தொல்ல தொல்ல

குழு : அடி அப்படி நீ சொல்லாதே
தப்பு வழி போகாதே
நல்ல பையன் கட்டிக் கொள்ளடி
நீ இஷ்டப்பட்டு ஒட்டிக் கொள்ளடி...

ஆண் : இவள எப்படி நான்
கல்யாணம் பண்ணிக்குவேன்
அதுக்கு கழுதையையோ
குதிரையையோ மேய்ச்சுக்குவேன்

பெண் : ராசிப் பொருத்தமுண்டு
ஜோடி பொருத்தமுண்டு
ஆண் : மனசு பொருத்தமில்லையே
பெண் : எனக்கு இவன புடிக்கவில்லையே...

ஆண் : வேணாண்டி ஆணவம் திமிரு
இப்ப சூடாக எரியுது வயிறு
வீணாக திரிக்கிற கயிறு
அடி நீ போனா போகுது.....உயிரு...

அட பொன்னால பொண்ணுக்கேதும் கிடைக்குமா
இந்த ஆம்பளை இல்லாம ஏதும் நடக்குமா
உன் பொன்னாலும் பொருளாலும் கெடைக்காத சங்கதிய
முன்னால வந்து வந்து தாரேன் தாரேன்
மூணு முடிச்சோட தாலிக் கட்ட வாரேன் வாரேன்

ஆண் : ராசிப் பொருத்தமுண்டு
ஜோடி பொருத்தமுண்டு
மனசு பொருத்தமென்னடி
தாலி கட்டப் போறேன் பார்த்துக் கொள்ளடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.