பாட்டு பாட வந்தேன் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Poove Ilam Poove (1987) (பூவே இளம் பூவே)
Music
Amal Dev
Year
1987
Singers
Vani Jayaram
Lyrics
Vairamuthu

பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்

யாரது யாரது நானும் தேடுகின்றேன்
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்..

மேகம் இங்கு வந்து வந்து போகும்
அந்த ஓடை வெள்ளிக் கொலுசு போட்டு போகும்
மேகம் இங்கு வந்து வந்து போகும்
அந்த ஓடை வெள்ளிக் கொலுசு போட்டு போகும்

கொடி மேலே மலர் ஊஞ்சல் ஆடாதோ
அந்த மலர் மேலே வண்டு ராகம் பாடாதோ
காடெங்கும் சங்கீதம் மாநாடு கூடியதோ..ஓஒ..ஹோ
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்

யாரது யாரது நானும் தேடுகின்றேன்
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்..

ஆஆஹா இது பூமியல்ல சொர்க்கம்
அட ஓஓஹோ அந்த வானம் ரொம்ப பக்கம்
ஆஆஹா இது பூமியல்ல சொர்க்கம்
அட ஓஓஹோ அந்த வானம் ரொம்ப பக்கம்

அந்த ஓடை அது மண்ணின் மேலாடை
இங்கு ஆடி வரும் மேகம் அது தானே பாவாடை
மண்ணுக்கும் விண்ணுக்கும் கல்யாணம் ஆகியதோ
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்

யாரது யாரது நானும் தேடுகின்றேன்
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.