என் தாயின் மீது ஆணை பாடல் வரிகள்

Movie Name
Mr. Bharath (1986) (மிஸ்டர் பாரத்)
Music
Ilaiyaraaja
Year
1986
Singers
Malaysia Vasudevan
Lyrics
Vairamuthu
என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன் (இசை)

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்
உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்

{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்

ஆ...ஆ...ஆ...}

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்

பாவம் தீர்க்க ஒரு கேள்வி கேட்க
இங்கு தெய்வம் நேரில் வர வில்லை
பாவம் நேரம் அதற்கில்லை
குற்றவாளிகளின் கொட்டம் தீர
ஒரு சட்டம் ஒத்து வர வில்லை
தர்மம் செத்துவிட வில்லை
கட்டில் வேறு ஒரு தொட்டில் வேறு எனில் என்னவாகும் உலகம்
சொந்தமில்லை ஒரு பந்தமில்லை இது நாகரீக நரகம்
தந்தை யாரோ கானல் நீரோ தாய்ப் பால் கூட கண்ணீரோ

உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்

{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்

ஆ...ஆ...ஆ... }

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்

பெண்கள் யாரும் இங்கு பெண்கள் இல்லை
அவர் எச்சில் துப்பும் ஒரு கிண்ணம்
என்று தானே உனதென்னம் காலம் மாறியது காட்சி மாறியது
பெண்மை ஆளுவது திண்ணம் சீதை சாகவில்லை இன்னும்
போன ஜென்ம வினை நாளை கொள்ளும் அது அந்த நாளில் வழக்கம்
இந்த ஜென்ம வினை இன்று கொள்ளும் இது இந்த நாளில் பழக்கம்
கருவில் தானே வெளிச்சம் இல்லை மண்ணில் வந்தும் ஒளி இல்லை

உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்

{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்

ஆ...ஆ...ஆ... 

என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்

உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்

{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்...

ஆ...ஆ...ஆ... }

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.