என்னம்மா கண்ணு பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Mr. Bharath (1986) (மிஸ்டர் பாரத்)
Music
Ilaiyaraaja
Year
1986
Singers
Malaysia Vasudevan, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
என்னம்மா கண்ணு

சொல்லம்மா கண்ணு 

என்னம்மா கண்ணு

சொல்லம்மா கண்ணு

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

யானைக்கு சின்ன பூனை போட்டியா - துணிஞ்சு
மோதிதான் பட்ட பாடு பாத்தியா

யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. அஹ

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்.. ஹா

வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு

சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு

சத்தியத்தை நம்பி ஓஹோ ஹோ...ஹோ...
லாபமில்லை தம்பி ஓஹோ.. ஹே... ஹோ

நிச்சயமா நீதி அஹ ஹாஹ ஹா....
வெல்லும் ஒரு தேதி அஹ ஹாஹ ஹா....

உன்னாலதான் ஆகாது வேகாது

கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் ஹோய்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்


எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்ல
என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல

இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல

மீசையில மண்ணு ஓஹோ..ஹோ.. ஹோ
ஒட்டினதை எண்ணு அஹ ஹாஹ ஹா..

பாயும்புலி நான்தான் அஹ ஹாஹ ஹா.
பார்க்கப் போற நீதான் அஹா ஹாஹ ஹா.

சும்மாவுந்தான் பூச்சாண்டி ஏய் காட்டாதே

நம்மகிட்ட போடுறியே தப்புதாளந்தான் ஹே

என்னம்மா கண்ணு

சொல்லம்மா கண்ணு

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

யானைக்கு சின்ன பூனை போட்டியா -ஆங்- துணிஞ்சு
மோதிதான் பட்ட பாடு பாத்தியா டேய் டேய்

யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்..

என்னம்மா கண்ணு சௌக்யமா ஆங்

ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான் ஆங்

என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆமாம்மா கண்ணு ..ஃபண்டாஸ்டிக் சார் !

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.