வா வெளியே இளம் பூங்குயிலே உன் பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Paadu Nilaave (1987) (பாடு நிலாவே)
Music
Ilaiyaraaja
Year
1987
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vaali

வா.....வெளியே இளம் பூங்குயிலே உன்
கூட்டை விட்டு இந்த வேளையிலே
மேடை மீது பாடும் கானமே.......
மேதை யார் தான் என்று கூறுமே நீ (வா)

நான் அறிவேன் இளம் பூங்குயிலே
விடை யார் அறிவார் இந்த போட்டியிலே
மேடை மீது பாடும் கானமே
மேதை யார் தான் என்று கூறுமே (நான்)

சுரங்களில் உள்ள சுகங்களை தொடுவேன்
லயங்களில் பல நயங்களை தருவேன்
தலைகனம் வர உனக்கென்ன மதமா
எனைவிட உந்தன் குரல் வளம் பதமா

திறமை இருந்தால் சபையில் விளக்கு
பொறுமை இருந்தால் புரியும் உனக்கு
ராக தீபம் ஏற்றி நானே ஞானமென்ன காட்டுவேன்
தாளத்தோடு பாவம் சேர்த்து காவியங்கள் தீட்டுவேன்

உழைப்பால் தானே உயர்ந்தேன் நானே
உழைப்பால் தானே உயர்ந்தேன் நானே
இருவரில் இனி வழக்குகள் எதற்கு
முகவுரை இது முடிவுரை இருக்கு (நான்)

அவையினில் உள்ள அனைவரின் இதயம்
சுவை மிகும் எந்தன் இசையினில் சரணம்
நினைவினில் பல அலைகளை எழுப்பும்
கனிரகம் எந்தன் தமிழிசை முழக்கம்

தெளியும் தெளியும் உனது மயக்கம்
ஆ...அதற்குள் உனக்கு எதற்கு நடுக்கம்
ஆ..தோல்வி என்ற வார்த்தை இல்லை
தோகை எந்தன் ஏட்டிலே
வார்த்தை ஜாலம் தேவையில்லை
காட்டு உந்தன் பாட்டிலே

தொடர்ந்தால் தானே ஜெயிப்பாள் மானே
தொடர்ந்தால் தானே ஜெயிப்பாள் மானே
பொறுத்திரு கொஞ்சம் முடியட்டும் வழக்கு
உனக்கல்ல வெற்றி கிடைப்பது எனக்கு (வா)
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.