Chithirai Maadhathu Nilavu Lyrics
சித்திரை மாதத்து நிலவு வருது பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
சித்திரை மாதத்து நிலவு வருது
வழி விடு வழி விடு மேகமே வழி விடு
மந்திர கானமும் மோகங்கள் தருது
விலகிடு விலகிடு நாணமே விலகிடு
மழைபோல் வருவாய் எனக்காக
நிலம்போல் தவிப்பேன் அதற்காக
சித்திரை மாதத்து நிலவு வருது
வழி விடு வழி விடு மேகமே வழி விடு
நீரோடும் ஆறாக நீ ஆகும் போது
நான்தானே மீன்போல நீராடுவேன்
மீன்போல நீ வந்து நீராடும்போது
நான்தானே தாளாமல் போராடுவேன்
காயங்கள் ஏதும் ஆகாமலே
காலோடு காலும் கையோடு கையும் பிண்ணாதோ
காவல்தான் மீறாதோ ஆவல்
நீ என்னை கொஞ்ச பட்டும் படமாலே
ஹும் ஹும் ஹும் தோகை மேனி வாடும் (சித்திரை)
ஊரெங்கும் ஓசைகள் ஓய்கின்ற நேரம்
ஆரம்பம் ஆகாதோ ஆராதனம்
நான் பாடும் ராகங்கள் ஒன்றல்ல நூறு
ஆனாலும் நீதான் என் ஆரோகணம்
தாளங்கள் என்றும் மாறாமலே
பாவங்கள் யாவும் பாட்டோடு சேரும்
நாள்தானோ..........
ஆதாரம் நீதானோ அன்பே
ஆனந்தம் என்றும் சந்தம் கெடாமலே
ஹும் ஹும் ஹும் காதல் கீதம் பாட (சித்திரை)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.