கல்லை மட்டும் கண்டால் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Dasavathaaram (2008) (தசாவதாரம்)
Music
Himesh Reshammiya
Year
2008
Singers
Hariharan
Lyrics
Vaali
ஓம்............. நமோ நாராயணாய
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண்
கழியும் என்றும் ஐந்தில்
எட்டு ஏன் கழியாது அஷ்ட
அக்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்சா அக்சரம் பார்க்காது
ஊனக் கண்ணில்
பார்த்தால் யாவும் குற்றம்
தான் ஞானக் கண்ணில்
பார்த்தால் யாரும்
சுற்றம் தான்
(கல்லை மட்டும் கண்டால் )

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
(இல்லை என்று சொன்னபின்பும்.)
வீர சைவர்கள்
முன்னால் எங்கள் வீர
வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு
அஞ்சி என்றும் மேற்கில்
சூரியன் உதிக்காது
ராஜலக்க்ஷ்மி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
(கல்லை மட்டும் கண்டால்..)

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
(நீருக்குள்ளே மூழ்கினாலும்..)
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.