பாடுங்கள் பாட்டு பாடுங்கள் பாடல் வரிகள்

Movie Name
Paadu Nilaave (1987) (பாடு நிலாவே)
Music
Ilaiyaraaja
Year
1987
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vaali

பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
போடுங்கள் தாளம் போடுங்கள்
வேதனைகள் ஓடி விடும்
வாழ்க்கையிங்கே தேடி வரும் (பாடுங்கள்)

கோடையிலும் மண் காய்ந்திருக்கும்
ஓடையிலும் நீருற்றிக்கும்
வாடுவதால் ஒரு லாபம் இல்லை
வாழ்த்திடத்தான் பிறந்தோம்

காலமும் நேரமும் கைக்கூட
கானலும் காவிரி நீராக
வேதனை சோதனை நேற்றோடு
போனது போனது காற்றோடு
இளவேனிலும் தென்றலும் வாசலில் வந்தது (பாடுங்கள்)

நிரி கரி நீ கமான் ரீபீட் நிரிகரி நீ அடிக்கடி நீ

நிகரி நீ நிக்கிற நீ ககரிநி உக்காரு நீ

நிரிமபத மதநிஸ நிதபம தபம

நிரிமப மபநிஸ நிஸரிம பதநிஸமப

ஏற்றி வைப்போம் நம் வாசலுக்கு
அன்பு என்னும் ஓர் பொன் விளக்கு
நாளை எனும் ஒரு நாள் இருக்கு
நலம் பெறத்தான் நமக்கு

பௌர்ணமி என்றொரு பொன் நாள்தான்

ஆ.........ஆ.........ஆ.......ஆ.......ஆ......ஆ.......

பௌர்ணமி என்றொரு பொன் நாள்தான்
பூத்தது இன்னொரு நன்னாள் தான்
சூழ்ந்திடும் மேகமும் தன்னால்தான்
காற்றினில் கரைந்தது இந்நாள்தான்
புது ஆனந்தம் என்பது ஆரம்பமானது (பாடுங்கள்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.