குத்தம்மா நெல்லு குத்து பாடல் வரிகள்

Movie Name
Paadu Nilaave (1987) (பாடு நிலாவே)
Music
Ilaiyaraaja
Year
1987
Singers
K. S. Chithra
Lyrics
Vaali
 குத்தம்மா நெல்லு குத்து 
 தெம்மாங்கு சொல்லி குத்து 
 சுத்தம்மா பூவச்சுத்து 
 காதோடு சேத்துச் சுத்து 
 

 பாரடி பொல்லாத மாமன்தான் 
 பல்லையிளிக்கும் தென்னாலி ராமன்தான் 
 நிக்குது செக்கு உலக்கை........(குத்தம்மா)
 உன் பட்டிக்காட்டு மெட்டுக்களை பாடு 
 என் காது குளிர கேக்கணும் 
 நீ கத்தி பாடும் சங்கதியைப் போடு 
 உன் தொண்டையழகை பாக்கணும் 
 

 மச்சானுக்கு கூடாதய்யா 
 கச்சேரிதான் செய்யும் ஆசை 
 கோட்டானுக்கு கிட்டாதய்யா 
 குயிலாட்டமா நல்ல ஓசை 
 

 அம்மாடி நீதான் தெம்மாங்கு பாட 
 சொல்லாம நாங்க எல்லோரும் ஓட 
 அப்பப்பா தப்பிச்சோம் ஆளவிடு..(குத்தம்மா)
 உன் முட்டிக்காலு தட்டுறப்போ பாத்தேன் 
 நீ மூக்கு வெளுத்த பிராணிதான் 
 உன் காட்டு கூச்சல் ஊரு சொல்லக் கேட்டேன்  
 என் ஞானம் உனக்கு ஏதய்யா 
 

கத்தாழைதான் செவ்வாழை போல் 
பூப்பூக்குமா எந்த நாளும்  
காட்டாறாத்தான் காவேரி போல் 
கொண்டாடுமோ எந்த ஊரும் 
 

என்னாட்டம் பாட எண்ணாதே சாமி 
அம்மாடி பாவம் தாங்காது பூமி 
அப்பப்பா போடாதே தப்புத்தாளம்......(குத்தம்மா) 

                                  
                              

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.