மாதா உன் கோவிலில் பாடல் வரிகள்

Movie Name
Achchani (1978) (அச்சாணி)
Music
Ilaiyaraaja
Year
1978
Singers
S. Janaki
Lyrics
Vaali
மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்

மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான்
தாயென்று உன்னைதான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா

மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்

[மேய்ப்பன் இல்லாத மந்தை
வழி மாறுமே… ஏ ஏ…] (2)

மேரி உன் ஜோதி கண்டால்
விதி மாறுமே…..
மெழுகு போல் உருகினோம்
கண்ணீரை மாற்ற வா மாதா

மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்

[காவல் இல்லாத ஜீவன்
கண்ணீரிலே….] (2)

கரை கண்டிடாத ஓடம்…
தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை
மணியோசை கேட்குமோ மாதா

மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்

[பிள்ளை பெறாத பெண்மை
தாயானது…..] (2)

அன்னை இல்லாத மகனை
தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை…
நான் என்ன சொல்வது மாதா

மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான்
தாயென்று உன்னைதான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா

மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்
ஹ்ஹீம்ம்ம் ஹீம்ம்ம்……

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.