எனக்கொரு சினேகிதி பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Priyamaanavale (2000) (பிரியமானவளே)
Music
S. A. Rajkumar
Year
2000
Singers
Hariharan, Mahalakshmi Iyer
Lyrics
Vaali
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

மேகமது சேராது வான் மழையும் வாடாது
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே

மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா

சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப்போடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்

மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி
உன்னைத்தந்து என்னை நீயும் வாங்கிகொண்டு நாட்களாச்சி
உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்களாச்சி
விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.