என்னவோ என்னவோ பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Priyamaanavale (2000) (பிரியமானவளே)
Music
S. A. Rajkumar
Year
2000
Singers
Hariharan, Mahalakshmi Iyer
Lyrics
Vaali
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா – ப்ரியமானவனே
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை

 மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
 குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
 விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
 நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
 விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா
 இடைவேளை வேண்டுமென்று இடம் கேக்கும் சம்மதமா
 நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
 என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா

 என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை

 இமையாக நானிருப்பேன் சம்மதமா சம்மதமா
 இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா
 கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
 கண்மூடி தவமிருப்பேன் சம்மதமா சம்மதமா
 ஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
 பலகோடி பௌர்னமிகள் பார்த்திடுமே சம்மதமா
 பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா
 பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா

 என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்

 என்னோடு நீயாக உன்னோடு நானாகவா

 ப்ரியமானவளே
 ப்ரியமானவனே
 ப்ரியமானவளே
 ப்ரியமானவனே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.